லேபிள்கள்

27.7.16

சொந்த ஊராட்சியில் தேர்தல் பணி கூடாது : தேர்தல் கமிஷன் செயலர் உத்தரவு.

உள்ளாட்சி தேர்தலின் போது சொந்த ஊராட்சியில் பணிபுரிய ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது,' என, தமிழ்நாடு மாநில
தேர்தல் கமிஷன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் உத்தர விட்டுள்ளார்.மாநில, மாவட்ட மற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்களுக்கு இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

சொந்த ஊராட்சிகளில் பணி புரிபவர்கள், ஒரே உள்ளாட்சி நிர்வாகத்தில் நீண்டகாலம் பணிபுரிபவர்கள் ஆகியோரை தேர்தல் பணியில் ஈடுபடக் கூடாது என்பதை மாவட்ட, மாநிலமற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊழியர்கள் உறவினர்கள் போட்டியிடும் உள்ளாட்சிகள் மற்றும் அந்த ஊள்ளாட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும், என கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக