லேபிள்கள்

28.7.16

சி.பி.எஸ்.இ., புதிய தலைவர் நியமனம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவராக, மத்திய பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ்குமார் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவர் வினீத்குமார் ஜோஷி, ஒன்றரை ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றார். புதிய தலைவரை நியமிக்க, மத்திய அரசு கமிட்டி அமைத்தது.

இந்த கமிட்டியினர், 15க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் நேர்முகத் தேர்வு நடத்தினர். அப்போது, விக்ரம் பகதுார் சிங் என்ற அதிகாரியை, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பரிந்துரை செய்தார். ஆனால், அந்த பரிந்துரை, மத்திய அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜேஷ்குமார் சதுர்வேதியை சி.பி.எஸ்.இ., தலைவராக, மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் நேற்று பதவியேற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக