தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு, தேர்வு எழுதி, ஓராண்டாக, 3,000 ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில், 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக பள்ளிக் கல்வித்துறை இக் காலியிடங்களை நிரப்ப, 2014ம் ஆண்டில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் எழுதினர். தேர்வு எழுதி ஓராண்டு ஆனபின், கடந்த ஆண்டு, மே மாதம் தேர்வு முடிவு வெளியானது.
இதில், 3,000 ஆசிரியர்கள் வெற்றி பெற்றனர். அடுத்த கட்டமாக இவர்கள் கடந்த ஆக., மாதம், சென்னையில் முதன்மைத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதி முடித்து, ஓராண்டு முடிவடையும் நிலையில் இன்னும் முடிவு வெளியாகவில்லை. இந்த தேர்வு முடிவை எதிர்பார்த்து, 3,000 ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சிலர் கூறுகையில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் விரைவாக முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். தேர்வானவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி, பல மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக