ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கவுன்சலிங் தொடங்க உள்ளநிலையில், மாறுதல் விதிமுறைகளில் மாற்றம் வர உள்ளதால்
ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்களுக்கு ஒவ்வொருஆண்டும் மே மாதத்தில் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடக்கும்.
பணியிட மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 1 ஆண்டாவது பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் சட்டப் பேரவை தேர்தலால் தள்ளிப் போனது. ஆகஸ்ட் 6ம் தேதி முதல் கவுன்சலிங் நடத்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்ததை அடுத்து ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு வரை நடந்த கவுன்சலிங்கில் உள்ள விதிமுறைகளே இந்த ஆண்டும் பின்பற்றப்படும் என்று ஆசிரியர்கள் கருதினர்.
அதாவது, பதவி உயர்வு மூலம் பணியிட மாறுதல் பெற்றவர்கள் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும் கடந்த ஆண்டு வரை பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பதவி உயர்வு பெற்றவர்களுக்கான விதியில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பதவி உயர்வு பெற்றவர்களும் குறிப்பிட்ட பணியிடத்தில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றி இருந்தால் தான் மாறுதல் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக