லேபிள்கள்

5.9.16

379 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது தமிழகத்தில், 379 ஆசிரியர்களுக்கு,

தமிழகத்தில், 379 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று வழங்கப்படுகிறது.
ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை, தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு, 379 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ் பள்ளியில்,இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கும் விழாவில்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், விருதுகளை வழங்குகிறார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'விருதுக்கான ரொக்கப் பரிசு,5,000 ரூபாயிலிருந்து, இந்தஆண்டு முதல், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது' என, தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக