லேபிள்கள்

7.9.16

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., செப்., 21ல் 2ம் கட்ட கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., 21ம் தேதி நடத்தப்படுகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன், 20 முதல், 25 வரை நடந்தது.


ஒதுக்கீடு : அரசு கல்லுாரிகளில், 2,379 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லுாரிகளில், 85; சுயநிதி கல்லுாரிகளில், 470 எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின.

அரசு கல்லுாரி : இவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்களில், அரசு கல்லுாரிகளில், 21 பேர் உட்பட, 143 பேர் படிப்பில் சேராததால், அந்த இடங்கள் காலியாக உள்ளன. இத்துடன், சுயநிதி கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 970 பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., 21ல் நடத்தப்படுகிறது.

மீதமுள்ள இடங்கள் : இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறிய
தாவது: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு, 20ம் தேதி முடிந்து விடும்; அன்று மாலைக்குள் நிரம்பாத இடங்கள், மாநிலத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்படும். ஏற்கனவே மீதமுள்ள இடங்களுடன், அந்த இடங்களையும் சேர்த்து, செப்., 21ல், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக