லேபிள்கள்

6.9.16

அரசின் கொள்கை சரியா ஆசிரியர்கள் கருத்து ெசால்ல வேண்டும்

சென்னை:அரசின்  கொள்கைகளில்  எது சரி, எது மாற்ற வேண்டும் என்பதில்  ஆசிரியர்கள் கருத்து சொல்ல வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.  பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 379 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. சாந்ேதாம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் நடந்த இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தலைமையுரையாற்றினார்.
379 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: தமிழக பள்ளிகளில் பணியாற்றும் 5 லட்சத்து 58 ஆயிரம் ஆசிரியர்களில் விருது பெறும் 379 ஆசிரியர்கள் தான் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். ஆசிரியர்கள் மன நிலையில் இருந்து இப்போது நான் பேசப்போகிறேன். ஆசிரியர்கள் எண்ணம் எப்படி இருக்கும் என்ற நிலையில் நான் பேசப் போகிறேன். ஆசிரியர் தொழில் மகிமைப்படுத்தப்பட்டது என்றால் அவர்கள் செய்த பணி சாதனை மிக்கது.

ஆனால் ஆசிரியர்கள் முன்னால் 17 சவால்கள் இருக்கின்றன. இந்த சவால்களை வெற்றிகொள்ள ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம். நாம் வாழும் உலகம் மாறிவிட்டது. பல நாடுகளில் எல்லைக் கோடுகள் மாறியுள்ளன. வகுப்பறைகள் மாறிவிட்டன. இதன் காரணமாக ஆசிரியர்களுக்கு மரியாதை என்பதும் குறைந்துவிட்டது. அதனால் ஆசிரியர்கள் தங்கள் மரியாதையை தக்க வைத்துக் கொள்ள மாணவர்களுக்கு என்ன தர வேண்டும்.  என்ன செய்தால் தொழிலை தக்க வைக்க முடியும். ஆசிரியர்களிடத்தில் மாணவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் உற்று நோக்க வேண்டும். 

வகுப்பில் கடைசி வரிசையில் உள்ள மாணவர்களுக்கு என்ன திறமைகள் உள்ளன என்பதை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். அவற்றை வெளியில் கொண்டுவரும்  உந்துதல் சக்தி ஆசிரியர்களிடம் உள்ளதா என்றும் கவனிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள். அதை கற்க விரும்புகிறார்களா, வாழ்வாதார திறன், வாழ்வியல் திறன், கற்றுக் கொள்ளும் திறன்  ஆகியவற்றை மாணவர்களுக்கு தருவதற்கு ஆசிரியர்களிடம் திறமை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக இருக்க வேண்டுமே தவிர, ஒருவருக்கு ஒருவர் கோள் சொல்லக்கூடாது.  அரசின் கொள்கைகளாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். என்ன கொள்கைகளை அரசு உருவாக்க வேண்டும், என்ன செய்தால் நன்றாக இருக்கும், எது சரி, எதை மாற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசுக்கு சொல்ல வேண்டும். ஆசிரியர்கள் குரல்களுக்கு இந்த அரசு மதிப்பளிக்கும். தரமான, பேரளவிலான கல்வியை கொண்டு வருவது எப்படி,  அதற்கேற்ப பாடத்திட்டத்தை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் ஆசிரியர்கள் கருத்து சொல்வதுடன் சாதக பாதகங்களை எடுத்து சொல்ல வேண்டும். 

மாணவர்களுக்கு தொழில்முனைப்புடன் கூடிய கல்வியை தர வேண்டும். தொழில் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இயற்கையாகவே மாணவர்களிடம் அந்த உணர்வை உருவாக்குவது ஆசிரியர்கள்தான். இந்த சவால்கள் முக்கியமானவை. அதற்காக அரசுடன் ஆசிரியர்கள் இணைந்து செயல்படுத்திக் காட்ட வேண்டும். இன்னும் பல மைல்கள் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அடுத்த தலை முறை ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. கனவுகளுக்கு வடிவம் கொடுக்க கூடிய திறமை ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக