லேபிள்கள்

9.9.16

ரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்??.

அரசு நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு இணைக்கப்பட்டு வருகின்றது.

அதை செய்யாதவர்கள், ரேஷன் கடைக்கு சென்று வரிசையில் நிற்க முடியாதவர்கள் நிறைய உள்ளனர்.
அவர்கள் ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச செயலியை (APP) பதிவிறக்கம் செய்தால் அது நமது ஸ்மார்ட் போன் ஸ்க்ரீனில் வந்துவிடும்.
பின் அதற்குள் செல்ல ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்தால் உடனே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP (One Time Password) SMS நமது தொலைபேசிக்கு வரும். அந்த எண்களை செயலியில் இட்டவுடன் செயலி திறக்கப்படும்.
அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக கேமரா திறக்கும். பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு நம் ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR code ஸ்கேன் செய்யப்பட்டு நமது ஆதார் எண் திரையில் தோன்றும்.
உடனே நாம் "சமர்ப்பி" என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும்.
முதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின் ரேசன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் வரிசையாக பதிவு செய்யவேண்டும். இது மிக எளிதான செயல். விரைவாக பதியப்பட்டு விடும்.
மேலும் இந்த செயலியின் மூலம் நமது ரேஷன் கார்டுக்குரிய பல்வேறு செயல்களை வீட்டில் இருந்தே நாம் கண்காணிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக