லேபிள்கள்

5.9.16

டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கு 6ம் தேதி முதல்விண்ணப்பம்

டிப்ளமோ நர்சிங்' என்ற, இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.
தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. 
இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 6ம் தேதி துவங்குகிறது.அரசு மருத்துவ கல்லுாரிகள், நர்சிங் பயிற்சி பள்ளிகள்உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், வரும், 15ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 16ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக