ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையிலான ‘சென்டா ஒலிம்பியாட்’ போட்டி நாடு முழுவதும் 22 நகரங்களில் டிசம்பர் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
போட்டிகளை ‘தி இந்து’ நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் இணைந்து வழங்குகின்றன.இதுகுறித்து சென்டர் ஃபார் டீச்சர் அக்ரெடியேஷன் (சென்டா) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரம்யா கூறியதாவது:5,000-க்கும் மேற்பட்டோர்..‘சென்டா டீச்சிங் புரொஃபஷ் னல்ஸ் ஒலிம்பியாட்- 2016’ என்பது ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான போட்டி. ஆசிரியர்களின் திறமையை வெளிப்படுத்தவும், மேம்படுத்த வும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 300 நகரங்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப் போட்டிகளில் கலந்துகொள்ள பதிவு செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, 2-வது ஆண்டாக நாடு முழுவதும் 22 நகரங்களில் வரும் டிசம்பர் 3-ம் தேதி 2016-ம் ஆண்டுக்கான போட்டிகள் நடக்க உள்ளன. போட்டிகளை ‘தி இந்து’ நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் போட்டி நடக்கும்.மொத்தம் 13 பிரிவுகளில் போட்டி நடைபெறும். இதில் ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை என தங்கள் விருப்பத்துக்கேற்ப ஆசிரியர்கள் போட்டிப் பாடப் பிரிவைதேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு துபாயில் 2017-ல் நடக்க உள்ள உலக கல்வி, திறன்மேம்பாட்டு மாநாட் டில் பங்கேற்க வார்கே அறக் கட்டளை சார்பில் வாய்ப்பு அளிக் கப்படும். ஒவ்வொரு மாநிலத்தி லும் முதலிடம் பெறுபவர்களின் விவரங்கள் ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகும். இதுதவிர, வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு சென்ட் ரல் ஸ்கொயர் அறக்கட்டளை சார்பில் வெளியாக உள்ள புத்தகத்தில் எழுதும் வாய்ப்பும், ஹெச்டி பாரேக் அறக்கட்டளை மூலம் 50 பேருக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு...
கணினி மூலம் போட்டி நடத்தப்படும். தேர்வு செய்துள்ள பாடம், பாடம் நடத்தும் விதம் உள்ளிட்டவை தொடர்பாக ‘ஆப்ஜெக்டிவ்’ வகை கேள்விகள் இடம்பெறும். போட்டி குறித்தகூடுதல் விவரங்கள், முன்பதிவு தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (www.tpo-india.org) தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கணினி மூலம் போட்டி நடத்தப்படும். தேர்வு செய்துள்ள பாடம், பாடம் நடத்தும் விதம் உள்ளிட்டவை தொடர்பாக ‘ஆப்ஜெக்டிவ்’ வகை கேள்விகள் இடம்பெறும். போட்டி குறித்தகூடுதல் விவரங்கள், முன்பதிவு தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (www.tpo-india.org) தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக