லேபிள்கள்

20.9.16

கற்றல் குறைபாடு குழந்தைகளுக்கு இலவச பயிற்சி

சென்னை: 'கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படும்' என, சென்னையில் உள்ள சங்கல்ப் சிறப்பு பள்ளி அறிவித்துள்ளது.

சிறப்பு பள்ளிகள் பட்டியலில் இந்திய அளவில், 10ம் இடத்திலும், தமிழகத்தில் முதல் இடத்திலும், சென்னை சங்கல்ப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி, கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள், சிறப்பு குழந்தைகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க உள்ளது.
இதற்கு, 'பள்ளிகளும், பெற்றோரும், 98412 73228 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்' என, பள்ளியின் இயக்குனர் சுலதா அஜீத் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக