சிவகங்கை: உள்ளாட்சித் தேர்தல் தேதி, இன்று அல்லது நாளை வெளியாக உள்ளது.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் அக்., 24 ல் முடிகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடித்து புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். முதற் கட்டமாக செப்.,17 மற்றும் செப்., 19 ல் வார்டு வாரியாக பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன.
மேலும் ஊரகம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் 50 சதவீதம் பெண்கள், இனசுழற்சி பட்டியல், சென்னையில் சில தினங்களாக அச்சடிக்கப்பட்டன.
பூர்வாங்க பணிகள் முடிந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று அல்லது நாளை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், இன்று காலை முக்கிய ஆலோசனை நடக்கிறது. மாநில தேர்தல் கமிஷனர் சீதாராமன், செயலர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் முடிவு எடுக்கப்பட்டு, தேதி அறிவிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக