லேபிள்கள்

4.11.16

மாணவர்களை கண்காணிக்க 'செல்பி'; மஹாராஷ்டிர அரசு முடிவு

மும்பை: அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இடை நிற்றலை குறைப்பதற்கு, ஆசிரியர்கள், மாணவர்களுடன், 'செல்பி' எடுத்து, மாணவர்கள் தொடர்பான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, மஹாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதிர்ச்சி தகவல் :

மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பலர், படிப்பை பாதியிலேயே கைவிடும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பள்ளியில் இருந்து விலகும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. 

'செல்பி' :
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தகவல்களை புகைப்படங்களுடன், 'சரள்' என்னும் மாணவர்கள் இணையதளத்தில் பதிவேற்ற, மாநில அரசு முடிவு செய்துள்ளது.திட்டம் அமலுக்கு வந்த பின், முதல் இரண்டு திங்கள் கிழமைகளில், ஒவ்வொரு ஆசிரியரும், 10 மாணவர்களுடன், மொபைல் போனில், 'செல்பி' எடுத்து, அந்த மாணவர்களின் பெயர், ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களுடன், மாணவர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்; இவ்வாறு, வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களின் தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நடவடிக்கை எடுக்க முடிவு:
பள்ளிக்கு ஒழுங்காக வராத மாணவர்கள் குறித்த தகவல்களை கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினால், மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக