ஆதார் அட்டை இல்லாததால் உதவித்தொகை பெற முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள், உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் வங்கி கணக்கில் உதவித்தொகை நேரடியாக செலுத்தப்படுவதால், வங்கியில் ஆதார் எண் சமர்பிக்க வேண்டியுள்ளது. பள்ளி மாணவர்களில் 20 சதவீதம் பேர் இன்னும் ஆதார் அட்டை பெறாத நிலையில் உள்ளனர்.இதனால் கல்வி உதவித்தொகை பெறுவதிலும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை ஆதார் அட்டை பெறாத மாணவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் விண்ணப்பிக்கலாம், என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.ஆனால், அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும், என பள்ளி நிர்வாகங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக