சமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூக பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் உறைவிடப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள 66 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை கடந்த 2012, 2013 நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மெரிட் பட்டியலில் இடம்பெற்றவர்களைக் கொண்டு நிரப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த நியமனம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளின் (தகுதித்தேர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் நியமன முறை) இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வுசெய்யப் பட்டவர்களின் பட்டியல் பதிவெண், பெயர், பிறந்த தேதி, வெயிட்டேஜ் மதிப்பெண், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகிய விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in)வெளியிடப்பட்டு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக