லேபிள்கள்

1.11.16

TNPSC GROUP I EXAM 2016 | 80 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் ....

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள் ளிட்ட பதவிகளில் 80 காலியிடங் களை நிரப்பும் வகையில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், பத்திரப் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், கோட்ட தீயணைப்பு அலுவலர் (டிஎப்ஓ) ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் குரூப்-1 தேர்வை எழுதலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் தவிர மற்ற அனைத்து இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கும் வயது வரம்பு 35 ஆகும். சட்டப் படிப்பு முடித்திருந்தால் கூடுதலாக ஓராண்டு வயது தளர்த்தப் படும். இந்த நிலையில், 2015-16-ம் ஆண்டு வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, நடப்பு ஆண்டு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு (45 காலியிடங்கள்) கடந்த ஆகஸ்டு முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு முதல்நிலைத் தேர்வு நவம்பர் இறுதி வாரத் தில் நடத்தப்பட வேண்டும். ஆனால், இன்னும் தேர்வுக்கான அறிவிப்பே வெளியிடப்படாததால் அத்தேர்வை எதிர்பார்த்து தீவிரமா கப் படித்து வரும் மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

குரூப்-1 தேர்வு அறிவிப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமாரிடம் கேட்டபோது, "வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் 45 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது காலியிடங்கள் அதிகரித்துள்ளன. தேர்வுக்கான அறிவிப்பு விரை வில் வெளியிடப்படும்" என்றார். கூடுதலாக 35 டிஎஸ்பி பணியிடங் களை நிரப்ப அரசு அனுமதி அளித்திருப்பதால் காலியிடங் களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்தன. குரூப்-1 தேர்வு மூலம் நேரடி யாக துணை ஆட்சியர் பணியில் சேருவோர் சுமார் 10 ஆண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், அதே போல், டிஎஸ்பி பணியில் சேரு பவர்கள் ஐபிஎஸ் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம். அத்துடன் அவர்கள் தமிழகத்திலேயே தொடர்ந்து பணியாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், டிஎன்பிஎஸ்சி வெளி யிட்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, ஜெயிலர் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி இறுதி வாரத்திலும், அதேபோல், தொழிலாளர் நல அதிகாரி (உதவி ஆணையர்) தேர்வுக்கு ஜூன் முதல் வாரத்திலும், சுற்றுலா அதிகாரி தேர்வுக்கு ஜூலை முதல் வாரத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் அந்த தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார் கூறும் போது, "குறிப்பிட்ட அந்த 3 தேர்வு களிலும் பாடத்திட்டம், தேர்வு முறை, கல்வித்தகுதி போன்றவை தொடர்பாக சில விளக்கங்கள் அரசிடம் கேட்கப்பட்டுள்ளன. எனவே, அந்த தேர்வுகளுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக