மாநில அளவில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மன அழுத்தம் போக்கும் சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நவ.,7 பொள்ளாச்சியில் துவங்குகிறது.ஆசிரியர்கள் மனஅழுத்தம் குறைய, திறன் மேம்பாடு, ஆளுமை திறன் அதிகரிப்பு,
மாணவர் - ஆசிரியர் உறவு மேம்பாடு உட்பட பல்வேறு காரணங்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி நவ.,7 முதல் 2017 டிச., வரை 17 கட்டங்களாக பொள்ளாச்சி ஆழியார் மனவளக்கலை யோகா மையத்தில் நடக்கிறது.இதில் அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் 950 பேர் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதற்காக முதன்மை கல்வி அலுவலகங்கள் வாரியாக தலைமையாசிரியர் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அனைவரும்
கட்டாயம் பங்கேற்க வேண்டும்," என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக