சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, தொழிற்கல்வி கட்டாயம் என்றாலும், மொழி பாடங்களில் மாற்றம் இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, விருப்பத்தின் அடிப்படையில், தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இவற்றில், பெரும்பாலான பாடங்களுக்கு மாணவர்களிடம் வரவேற்பு இல்லாததால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, 41 பாடங்களை நீக்கி, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய விதிகளை, சி.பி.எஸ்.இ., அறிவித்தது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல், 10ம் வகுப்பு மாணவர்கள், தொழிற்கல்வி பாடத்தையும் சேர்த்து, ஆறு பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில், ஏதாவது ஒன்றில், மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால், தொழிற்கல்வி பாடம், ஐந்தாம் பாடமாக கணக்கில் எடுக்கப்பட்டு, மாணவர்கள் அடுத்த நிலைக்கு தேர்ச்சி செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டது.இரு மொழி பாடங்களில் தேர்ச்சி பெறாவிட்டால், அதற்கு மாற்றாக தொழிற்கல்வி, ஐந்தாம் பாடமாக ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற குழப்பம், பல பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., அளித்த விளக்கம்:இரு மொழி பாடங்களிலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்; அதில் மாற்றம் இல்லை. மூன்று முக்கிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெறாவிட்டால் மட்டுமே, தொழிற்கல்வி மாற்று பாடமாக எடுக்கப்படும். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு, மாணவர்கள் விரும்பினால், துணை தேர்வு எழுதலாம்.இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக