லேபிள்கள்

21.3.17

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிட கல்வி துறை தீவிரம்

தேர்வுத் துறை மூலம், ஆய்வக உதவியாளர் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தயாரிக்கின்றனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்,
4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல், எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 

எழுத்துத் தேர்வு நடந்தாலும், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, பணி நியமனம் செய்யப்படும் என, அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், இறுதி பட்டியல் தயாரிப்பு பணி, மீண்டும் துவங்கிஉள்ளது.

இந்த முறை, தேர்வுத் துறை அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு, பள்ளிக்கல்வி அதிகாரிகள் மூலம், இறுதி பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில், பல ஆண்டுகளாக பணியாற்றிய, இணை இயக்குனர் சேதுராம வர்மா மூலம், இறுதி பட்டியல் தயாரிக்கப்படுவதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கு, தேர்வுத் துறையினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். 'தேர்வை நடத்துவது நாங்கள்; முடிவை தயாரிப்பது, பள்ளிக்கல்வி அதிகாரிகளா' என, கேள்வி எழுப்பிஉள்ளனர்.ஆய்வக உதவியாளர் தேர்வு துவங்கியது முதல், சர்ச்சைகள் குவிந்த வண்ணம் உள்ளன. 2015ல், தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் ஓய்வு பெற, இரு மாதங்களே இருந்த நிலையில், அவசர அவசரமாக, ஆய்வக உதவியாளர் தேர்வை நடத்தினார். தேர்வு முடிவுகளும், அவசர கதியில் தயாரானது. பின், வழக்கு காரணமாக, தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.அதன் காரணமாக, தற்போது, பள்ளிக்கல்வி அதிகாரிகள், தேர்வு முடிவை தயாரித்து வருகின்றனர். அதில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் தலையீட்டால், மீண்டும் குளறுபடி ஏற்பட்டுவிடக் கூடாது என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக