லேபிள்கள்

19.3.17

மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்

பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும், 2,750 கோடி நிதியை, மத்திய அரசிடம் பெறாமல், தமிழக அரசு இழந்துள்ளது. 

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், இலவசமாக மாணவர்களை சேர்க்கவும், மத்திய அரசு நிதி வழங்குகிறது.இதற்காக, ஆண்டுதோறும், பல கட்டங்களாக நிதி ஒதுக்கப்படும். அதில், நான்கு ஆண்டுகளில் மட்டும், தமிழகத்துக்கு வந்து சேர வேண்டிய, 2,750 கோடி ரூபாயை, தமிழக அரசு இழந்துள்ளது.


இதுகுறித்து, பட்ஜெட் அறிக்கையில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில், 1,476 கோடி ரூபாய், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககத்தில், 1,266 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால், இதற்கான நிதியை, தமிழக அரசே ஒதுக்கீடு செய்துள்ளது என, கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்: எந்த ஒரு திட்டத்திலும், தமிழக பள்ளிக் கல்வித்துறை முறையாக பணிகளை மேற்கொண்டு, உரிய காலத்தில் முடிப்பது இல்லை. மத்திய அரசு தெரிவிக்கும் விதிகளின்படி, 'டெண்டர்' அறிவித்தல், திட்டங்களை செயல்படுத்துதல், கட்டாய கல்வி சட்டத்தில், மாணவர்களை சேர்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதில்லை.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி செயலரை அழைத்து, மத்திய அரசு அதிகாரிகள் பல முறை அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், மத்திய அரசிடம் நிதி பெற முடியவில்லை.இவ்வாறு பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

2 கருத்துகள்: