லேபிள்கள்

19.3.17

ஜிப்மர் வினாத்தாள் 'லீக்': சி.பி.சி.ஐ.டி., விசாரணை

ஜிப்மர் செவிலியர் பணி வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, ராஜஸ்தான் மாநில வாலிபர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள, 82 செவிலியர் பணிடங்களுக்கான போட்டித் தேர்வு, 12ல் புதுச்சேரியில், 30 தேர்வு மையங்களில் நடந்தது. 

ஜிப்மர் மருத்துவப்படிப்பு, வேலை வாய்ப்பு தேர்வு நடத்தப்பட்டால், தேர்வு முடிந்த பின், வினாத்தாளை தேர்வர்களுக்கு வழங்குவதில்லை.ஆனால், 12ம் தேதி நடந்து முடிந்த செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு வினாத்தாள், சில நாட்களுக்கு முன், வாட்ஸ் ஆப்பில் வெளியானது.
தேர்வு அறைக்குள் பேனா, அலைபேசி, பர்ஸ் உள்ளிட்ட எந்த பொருளும் அனுமதிக்காத நிலையில் வினாத்தாள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.ஜிப்மர் மருத்துவமனை நடத்திய விசாரணையில், அரும்பார்த்தபுரத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய இருவர், அலைபேசி மூலம் வினாத்தாளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ளது தெரியவந்தது. இருவரையும் தகுதி நீக்கம் செய்த ஜிப்மர் நிர்வாகம், இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தது.ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மசூரியாவை சேர்ந்த மனீஷ் சவுத்ரி என்பவர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக