லேபிள்கள்

19.3.17

கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.

ஓய்வூதியதாரர்கள் கருவூல அலுவலகத்துக்கு செல்லாமல் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவுசெய்யும் புதிய வசதி ஏப்ரல் முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் ஜுன்மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்ய வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் உயிர்வாழ் சான்று பெற்று கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். இந்நிலையில், ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள் வழியாக இணையத்தளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழைப் பதிவு செய்யும் முறை இந்த ஆண்டு முதல் நடை முறைப்படுத்தப்படுகிறது.இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண் (பான் கார்டு)குடும்ப அடையாள அட்டை சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், இந்த ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய எண்ணை (பிபிஓ நம்பர்) குறிப்பிட்டு கருவூ லத்தில் சமர்ப்பிக்கவேண்டும். ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத் துக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். 

நேரில் வர இயலாத ஓய்வூதியர் கள் ஓய்வூதியப் புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களு டன் உயிர்வாழ் சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். உயிர்வாழ் சான்று படிவத்தை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தி லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வாழ்வு சான்று படிவத்தை ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்தியஅரசு அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்-இவர்களில் யாரேனும் ஒருவரிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்று அனுப்ப வேண்டும்.வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூ தியர்கள் அங்குள்ள மாஜிஸ்ட்ரேட், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலு வலரிடம் உயிர்வாழ் சான்று பெற்று, ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களுடன் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூலத்தில் பதிவு செய்து, இணைய தளவழி சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

வெளிநாட்டில் வாழும் ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் ஆதார் எண் பெற்று ஜீவன் பிரமான் போர்ட்டலில் பதிவு செய் திருந்தால் உயிர்வாழ் சான்றை இணையதளம் மூலமே பெற்றுக் கொள்ளலாம். மேலும், குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர் கள் மற்றும் நேரில் வரஇயலாத ஓய்வூதியர்கள்) மறுமணம் புரிய வில்லை என்பதற்கான உறுதி மொழியினை சமர்ப்பிக்க வேண்டும்.ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருப்பின்) ஆகிய விபரங்களையும் அளிக்க வேண்டும். ஏப்ரல் முதல் ஜுன் வரை நேர்காணலுக்கு வரத்த வறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட உயிர்வாழ் சான்றை அனுப்பத் தவறினாலோ ஆகஸ்டு முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், ரயில்வே, அஞ்சல்துறை, தொழி லாளர் வைப்பு நிதித்திட்டம் (இபிஎப்), மத்திய அரசு ஓய்வூதி யர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதி யர்களுக்கு மேற்சொன்ன அறிவிப்பு பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக