பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மெட்ரிக் பள்ளிகள் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு 'மொட்டை' கடிதங்கள் குவிந்து வருகின்றன.
இதனால் இங்கு பறக்கும் படை கண்காணிப்பு தீவிரப்படுத்த கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.மார்ச் 2 மற்றும் 8 முதல் முறையே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்கியுள்ளன. மதுரை, திண்டுக்கல் 'நோடல்' அதிகாரியாக இணை இயக்குனர் பொன்குமார், தேனி மாவட்டத்திற்கு தேர்வு துறை துணை இயக்குனர் கணேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.தேர்வுகள் நடந்து வரும் நிலையில், இம்மாவட்டங்களில் உள்ள சில மெட்ரிக் பள்ளிகள் மீது முதன்மை கல்வி அலுவலர், 'நோடல்' அதிகாரி, கல்வி இயக்குனர் மற்றும் செயலாளருக்கு ஏராளமான 'மொட்டை' கடிதங்கள் அனுப்பப்பட்டன.இந்நிலையில் நேற்று பிளஸ் 2 இயற்பியல் தேர்வின்போது திண்டுக்கல்லில் சில குறிப்பிட்ட மெட்ரிக் பள்ளிகளில் 20க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் மதுரை பறக்கும் படை திண்டுக்கல்லுக்கும், அங்குள்ள பறக்கும் படை மதுரையிலும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதற்கு முதுகலை ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அச்சங்க நிர்வாகிகள் கூறுகையில், "பறக்கும் படை என்பது ஒரு கல்வி மாவட்டத்திற்குள் பணியில் ஈடுபடுத்தப்படும். ஆனால் இந்தாண்டு முதல் முறையாக மதுரை, திண்டுக்கல், தேனியில் கல்வி மாவட்டம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பணிகள் ஒதுக்கப்படுகின்றன. இதுகுறித்து கல்வி உயர் அதிகாரிகள் தெளிவான பதில் அளிக்கவில்லை," என்றனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இம்மூன்று மாவட்டத்தில் சில பள்ளிகளுக்கு தேர்வு பணிக்காக ஆசிரியர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், சில பள்ளிகளில் ஒரு மதிப்பெண் பகுதி வினாக்களை 'காப்பி' அடிக்க வைக்க திட்டமிடுவதாகவும் 'மொட்டை' கடிதங்கள் வந்தன. இதன் அடிப்படையில் கூடுதல் பறக்கும் படை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது," என்றார்.'நோடல்' அதிகாரி மாற்றம் தேனி மாவட்ட 'நோடல்' அதிகாரி துணை இயக்குனர் கணேசன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நேற்று மாற்றப்பட்டார். அவருக்கு பதில் இணை இயக்குனர் பொன்குமார் மதுரை மற்றும் தேனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக