லேபிள்கள்

25.3.17

ஜீன்ஸ், டி - ஷர்ட்' அணிய ஆசிரியர்களுக்கு தடை -உ.பி முதல்வர் உத்தரவு

உ.பி.,யில் பதவியேற்றுள்ள புதிய அரசு, 100க்கும் மேற்பட்ட போலீசாரை, 'சஸ்பெண்ட்' செய்தும், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் உத்தரவிட்டு உள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி சமீபத்தில் பதவியேற்றது. தம் ஆட்சியில், மாநிலத்தை பல்வேறு துறைகளில் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, முதல்வர் உறுதியளித்திருந்தார்.அதன்படி, தன் வசமுள்ள 
காவல் துறையை மேம்படுத்த திட்டமிட்ட முதல்வர் ஆதித்யநாத், காவல் நிலையங்களுக்கு சென்று, அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்டார். 

சில தினங்களுக்கு முன், பணியில்ஒழுங்கீனமாக இருக்கும் போலீசார் குறித்து பட்டியல் தயாரிக்கும் படி, டி.ஜி.பி., ஜாவித் அஹமதிடம், முதல்வர் உத்தர விட்டிருந்தார்.அந்த பட்டியலின்படி, 7இன்ஸ்பெக்டர் கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர்களில், காஜியாபாத், மீரட், நொய்டா போலீசார் அதிகம்.

அதே போன்று, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்,பள்ளிக்கு வரும் போது, 'ஜீன்ஸ், டி - ஷர்ட்' அணியக்கூடாது; பான் மசாலா, குட்கா, புகையிலை மற்றும் சிகரெட் பயன் படுத்தக் கூடாது; 

பணி நேரத்தில் அலைபேசி பயன்படுத்தக் கூடாது; பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்; காலையில் பள்ளி துவங்குவதற்கு முன், பிரார்த்தனை கட்டாயம் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக