தமிழகத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; ஏப்., 14க்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்,
10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 31ல் முடிந்தது; 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். மொழி பாட விடைத்தாள்கள், மார்ச் 31 முதல் திருத்தப்படுகின்றன. கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு, ஏப்., 2 முதல் திருத்தம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, மொழி பாடங்களுக்கு, 'சென்டம்' ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல கட்ட ஆய்வுக்கு பின், மொழி பாடத்தில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வழங்கும் நிலை ஏற்பட்டால், தேர்வுத்துறை அனுமதிக்கு பின் வழங்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்., 14க்குள் விடைகளை திருத்தி முடிக்க வேண்டும்; பின், மதிப்பெண்ணை சரி செய்யும் பணிகளை துவங்க வேண்டும் என, ஆசிரியர்களை, தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிளஸ் 2 விடை திருத்தம் தீவிரம் : பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தமும், தீவிரமாக நடந்து வருகிறது. ஏப்., 5ல் துவங்கிய விடை திருத்தம், மொழி பாடத்திற்கும், மற்ற முக்கிய பாடங்களுக்கும் தனித்தனியே நடந்து வருகிறது. ஏப்., 21க்குள், விடை திருத்தத்தை முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக