லேபிள்கள்

12.4.17

நீட் தேர்வு விலக்கு கோரி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்.- கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு - இயக்க தோழர்கள் கலந்து கொள்ள TNGTF அழைப்பு

*கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு- தமிழ்நாடு.*

நீட் தேர்வு விலக்கு கோரி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்.


நாள்:19.04.2017
நேரம்:மாலை 5.00
சமூக நீதிகாத்த தமிழக பெரியோர்களே!கடும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டுள்ள +2 மாணவர்களே பெற்றோர்களே!

நாற்பது சங்கங்களையும் இரண்டு இலட்சம் உறுப்பினர்களையும் கொண்ட கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சமூக நீதி காக்கவும் கூட்டாட்சி நலன் காக்கவும் இப்போராட்டத்தில் களம் இறங்குகிறது.
1.சமமான கற்றல் வாய்ப்பு இல்லாத நாட்டில் சமமான போட்டித் தேர்வுகள் என்பது அராஜகம்.
2.நுழைவுத் தேர்வு இல்லாமல் ஒரு துளிகூட முறைகேட்டுக்கு இடமின்றி மருத்துவ கல்வி சேர்க்கையை தமிழ்நாடு அரசு நடத்தி வந்தது.
3.சமூக நீதி அடிப்படையில் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் பாராட்டியது. உச்ச நீதிமன்றம் ஏற்றது.
4.தற்போதைய நுழைவுத் தேர்வுக்கு​ வித்திட்ட 2013 உச்ச நீதிமன்ற தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இன பழங்குடி மக்களுக்கு எதிரானது.
5.மாநில பாடத்திட்டம் வேறு.நீட் பாடத்திட்டம் வேறு.எனவே 2016-17 ஆண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற சட்டம் இப்போதும் நூறு விழுக்காடு பொருந்துவதாகவே உள்ளது.
6.இந்தியக் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசு உயர் கல்வி தரத்தை தீர்மானிக்க வல்லது.அது மாநில அரசுகளின் உயர் கல்வி சேர்க்கையை தீர்மானிக்க உரிமை கொண்டது அல்ல.
7.இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் எந்த வகையான வாரியக் கல்வி முறையில் படித்திருந்தாலும் தனிப் பயிற்சி மையங்கள் இன்றி வெற்றி பெற இயலாது.எனவே நீட் முறை பள்ளிக் கல்வி முறைக்கு எதிரானது.சமூக நீதிக்கு எதிரானது.
8.கேரளாவின் திருச்சூர் இராஜஸ்தானின் கோட்டா போன்று இந்தியா​ முழுவதையும் தனிப் பயிற்சி கூடங்களாக மாற்றக் கூடியது.
9.நீட் மற்றும் எக்ஸிட் போன்ற தேர்வுகள் இந்திய உயர் கல்வியை​ உலக வர்த்தக அமைப்புக்கு அடகு வைத்து, இந்திய கல்வியை கார்பரேட் மயம் ஆக்கக் கூடியது.
10.நீட் தேர்வு எழுத ஒரு மாணவனுக்கு குறைந்த பட்சம் ரூபாய்.5000/- செலவாகும்.
இந்த ஐந்தாயிரம் இன்றி மருத்துவ கல்வி கல்வி உரிமையை இழந்த குழந்தைகள்​ ஏராளம்.எனவே தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டவே வேண்டாம்.
மத்திய அரசே! தமிழ்நாடு அரசு அணைத்து கட்சி ஆதரவோடு நிறைவேற்றி அனுப்பி உள்ள சட்ட மசோதாவிற்கு கள்ள மெளனம் சாதிக்காமல் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவண்
*கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு- தமிழ்நாடு.*


மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்க தோழர்கள் திரளாக கல்ந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
TNGTF மாநில அமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக