லேபிள்கள்

13.4.17

ஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி?

“ஆண்டவன் புண்ணியத்தில் ஆதார் வாங்கிட்டேன்” என மக்கள் விடும்
நிம்மதிப் பெருமூச்சு புரிகிறது. ஆனால், நம் கடமையை அதோடு முடிய விட மாட்டேன் என்கிறது மத்திய அரசு. “ஆதார் எல்லாம் கட்டாயம் இல்லை” என ஒரு பக்கம் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து சொல்லி வருகிறது. இன்னொரு பக்கம், எல்லாவற்றுக்கும் ஆதார் அவசியம் என அறிவித்தபடி இருக்கிறது மத்திய அரசு. 
 பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
வருமான வரித்துறையின் லாக் இன் பக்கத்துக்கு முதலில் வரவும்.
இதற்கு முன் எப்போது இங்கே வந்தோம் எனப் பலருக்கும் நினைவில்லாமல் இருக்கலாம். அல்லது பழைய மொபைல் எண்ணைப் பதிவு செய்திருக்கலாம். லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு நினைவில் இருப்பவர்கள் லாக் இன் செய்யலாம்.  மற்றவர்கள் Forgot Password க்ளிக் செய்து அடுத்த பக்கத்துக்குத் தாவவும்.
உங்கள் பான் நம்பர்தான் உங்கள் யூஸர் ஐடி. அதையும் captcha code-ஐயும் டைப் செய்து அடுத்த பக்கத்துக்குத் தாவவும்.
இங்கே டிராப்டவுன் பாக்ஸில் நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் மூன்றாவது OTP ஆப்ஷனை செலக்ட் செய்யவும். அடுத்த பக்கத்தில் நமது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தந்தால், அதற்கு அனுப்புவார்கள். அதை வைத்து பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம். மொபைல் எண் பழைய எண்ணாக இருந்தால், புதிய எண்ணைக் கொடுத்து அதையும் இங்கே மாற்றிக்கொள்ளலாம்.
பாஸ்வேர்டு மாற்றிய பின் 12 மணி நேரம் கழித்தே பான் நம்பரோடு ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
12 மணி நேரம் கழித்து லாக் இன் செய்ததும், ஒரு பாப் அப் விண்டோ வரும். அதில், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா எனக் கேட்கும். அந்த பாப் அப்பை விட்டுவிட்டால், புரொபைல் செட்டிங்குக்குப் போய்க்கூட ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
இங்கே உங்கள் பெயர், பிறந்த தேதி ஆகிய தகவல்களை கவனமாகப் பதிவு செய்யவும். அனைத்துத் தகவல்களும் முன்னர் கொடுத்த தகவல்களோடு பொருந்தினால், ஆதார் எண்ணைக் கேட்கும். அதையும் டைப் செய்து “Link now” கொடுத்தாlல் பான் எண்ணோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்
“your aadhar number is successfully linked with pan card” என மெசெஜ் வந்தால், முதல் வரியில் சொன்ன ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் பெயரோ, இனிஷியலோ மேட்ச் ஆகவில்லை என மெசெஜ் வந்தால், உடனடியாக ஆதார் உதவி எண்ணைத் (1800-300-1947 அல்லது 1947) தொடர்பு கொண்டு என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியில் ஜெயிக்கப்போவது மத்திய அரசுதான். உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை எப்படியாவது இணைத்தே ஆக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக