லேபிள்கள்

11.4.17

ஊதியக்குழு கருத்து தெரிவிக்க ஆசிரியர் சங்கத்தினருக்கு 'கெடு'

எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து, வரும், 15க்குள் கருத்துகள் அனுப்பும்படி, ஆசிரியர் சங்கத்தினருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய, தமிழக அரசு, ஆய்வுக்குழுவை அமைத்துள்ளது. இதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர், அரசு அலுவலர்கள், ஊழியர்களிடம் கருத்துகளை கேட்டு, ஆய்வறிக்கை தயார் செய்கின்றனர். இந்நிலையில், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறை சங்கங்களுக்கு, ஊதிய ஆய்வுக்குழு, கடிதம் அனுப்பி உள்ளது. அதில், வரும், 15க்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, ஆசிரியர் சங்கங்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக