லேபிள்கள்

11.4.17

தொழில்நுட்ப தேர்வு எப்போது? : சிறப்பு பாட ஆசிரியர்கள் தவிப்பு

அரசு பள்ளி சிறப்பு பாட ஆசிரியர்களுக்கான, தொழில்நுட்ப தேர்வு, ஒன்றரை ஆண்டுகளாக நடக்கவில்லை. அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கைவினை, சிற்பக் கலை உள்ளிட்டவற்றுக்கு, தனியாக சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். 


2012ல், 1,200 பேர் நியமிக்கப்பட்ட பின், ஐந்து ஆண்டுகளாக, சிறப்பு ஆசிரியர் நியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தொழில்நுட்ப தேர்வும் நடத்தப்படவில்லை. அதனால், சிறப்பு பாடப் பிரிவுகளில், பயிற்சி பெற்றவர்கள், பணியில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது: கடந்த, ஏழு ஆண்டுகளாக, தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி நடத்தப்படவில்லை. அதேபோல், 2015 நவம்பருக்கு பின், தொழில்நுட்ப தேர்வுகளையும் நடத்தவில்லை. சிறப்பாசிரியர்கள் பணிக்கு, 1,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அவற்றில் ஆசிரியர்களை நியமிக்க, சிறப்பு தேர்வு நடத்தப்படும் என, 2014ல், பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது; 2015ல், பாடத்திட்டமும் வெளியானது. ஆனால், அந்த தேர்வையும் நடத்தவில்லை.


 இதனால், தனியார் பள்ளிகளில் கூட வேலைக்கு சேர முடியாமல், பட்டதாரிகள் தவிக்கின்றனர். எனவே, பள்ளிக் கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுத்து, முடங்கிய பணிகளை மீண்டும் துவக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக