லேபிள்கள்

9.4.17

ஆசிரியர் தகுதித்தேர்வு போராட்டக் களத்தில் குதிக்கத் தயாராகும் 3200 ஆசிரியர்கள்

ஏப்ரல் மாதம் இறுதியில் 29, 30 தேதிகளில் 1861 தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க இருக்கிறது.
இந்தத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுத இருக்கிறார்கள். தேர்வு நடப்பதற்கு முன்பே `ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பழைய வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படும்' என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கிறார். தமிழக கல்வித்துறை இயக்குநர் 'தமிழகத்தில் 23.8.2010-க்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வே இறுதியானது. இதில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்' என்று சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.
[4/9, 19:47] ‪+91 84898 75286‬: இந்த அறிக்கை ஆசிரியர்கள் பலருக்கும் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் மத்திய அரசு 23.8.2010-ம் தேதி அரசு ஆசிரியர் பணி இடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியே ஆசிரியர்களை நிரப்ப வேண்டும்; மற்றும் அது அந்தந்த மாநில அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்று வெளியிட்டு இருந்தது. ஆனால், தமிழக அரசு இந்த அறிவிப்பைப் பொருட்படுத்தாமல் 2012 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இடைப்பட்ட காலத்தில் 3200 பேரை வயது மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர்களை நியமித்து வந்தது. அதன் பின்பே தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தியது. 

இந்த நிலையில் தமிழக கல்வித் துறை இயக்குநர் அறிக்கை 3200 ஆசிரியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசிய போது ‘‘தமிழகத்தைப் பொறுத்தவரை கால காலமாக ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களையும், பட்டய ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வயது மூப்பு அடிப்படையில் அரசு ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படுவது வழக்கம். ஆனால் மத்திய அரசு 23.8.2010 தேதிக்குப் பிறகு ஆசிரியர் பணியில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணியில் தொடர முடியும். இல்லையென்றால் ஆசிரியர் பணியில் இருந்து நீடிக்க முடியாது என்று மாநில அரசுக்குக் கடிதம் எழுதியது. மாநில அரசு இந்தக் கடிதத்தைக் கண்டுகொள்ளாமல் ஆசிரியர்களை நியமித்தது. ஆனால், மத்திய அரசின் தொடர் கடிதத்தால் எங்களுக்குச் சிக்கல் வர ஆரம்பித்து விட்டது.

எங்களுக்கான சலுகையாக 10 ஆசிரியர் தேர்வு காலங்களுக்குள் தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் பணியில் தொடரலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி இருந்தால் ஐந்து ஆண்டுகளில் 10 ஆசிரியர் தகுதி தேர்வு நடந்து இருக்கும். நாங்களும் தேர்ச்சி பெற்று அரசு வேலையைத் தக்க வைத்திருப்போம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை தான் ஆசிரியர் தகுதி தேர்வை அரசு நடத்தியது. தற்போது வரும் ஆசிரியர் தகுதி தேர்வு எங்களுக்கு மூன்றாவது முறையாக நடத்தப்படும் தேர்வு. இந்தச் சூழ்நிலையில் தமிழக கல்வி துறை இயக்குநர் தனது சுற்றறிக்கையில் 29.4.2017 மற்றும் 30.4.2017 அன்று நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் வேலையினை தக்க வைக்க முடியும் என்றும், இந்தத் தேர்வே இறுதியானது என்று சொல்லி இருக்கிறார். இதன் மூலம், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு ஆசிரியர்களாக நீடிக்க முடியும். தேர்ச்சி பெறாவிட்டால் அரசு ஆசிரியராகத் தொடர முடியாது என்ற நிலையினை உருவாக்கி இருக்கிறார். 

இதனால் என்னைப்போல் 3200 ஆசிரியர்களும் பெரும் அச்சத்தில் இருக்கிறோம். எங்களுக்கு ஆரம்பத்தில் வலியுறுத்தப்பட்ட 10 தேர்வுக்காலம் வரை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக கல்வி துறை இயக்குநரின் சுற்றறிக்கையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விரைவில் பெரிய போராட்டம் நடத்த இருக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வா, சாவா என்ற போராட்டமாக இருக்கிறது’’ என்கிறார். 

ஆசிரியர்களின் போராட்டம் வெற்றி பெறுமா அல்லது பள்ளி கல்வித் துறை ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறாதவர்களை வீட்டுக்கு அனுப்புமா என்பது அடுத்த மாதம் தெரிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக