லேபிள்கள்

11.4.17

இன்ஜி., கவுன்சிலிங் ஏப்., 18ல் பதிவு துவக்கம்

அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவை, ஏப்., 18ல் துவங்க, உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பில், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், தமிழக அரசின் இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி மூலம், மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதற்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில், ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான, இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, ஏப்., 18ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவை துவங்க, உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மருத்துவ பல்கலை, வேளாண் பல்கலை, கால்நடை மருத்துவ பல்கலை, ஐ.ஐ.டி., ஆகியவற்றின் கவுன்சிலிங் தேதிகளுடன் ஒப்பிட்டு, இன்ஜி., கவுன்சிலிங் தேதி முடிவு செய்யப்படும். 

இதற்காக, தமிழக அரசின் தேர்வுத்துறை அதிகாரிகளிடம், பல்கலை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மே 12ல், தேர்வு முடிவு வெளியானால், எத்தனை நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, தேர்வுத் துறையினரின் தகவல்களின் படி, இன்ஜி., கவுன்சிலிங் தேதி முடிவு செய்யப்படும். இதன்படி, ஜூன் 23ல், விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டிற்கும்; ஜூன் 26ல், பொது பிரிவுக்கும் கவுன்சிலிங்கை துவங்க, ஆலோசனை நடந்து வருவதாக, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக