சென்னை: 'கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச எல்.கே.ஜி., வகுப்புக்கு, 25ம் தேதி வரை மாணவர்களை சேர்க்கலாம்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், எல்.கே.ஜி., வகுப்பில் மாணவர்கள், இலவசமாக சேர்க்கப்படுகின்றனர். கடந்த மாதம், 'ஆன்லைன்' மூலம் நடந்த, மாணவர் சேர்க்கையில், 47 ஆயிரத்து, 129 மாணவர்கள் இலவச ஒதுக்கீட்டில் இடம் பெற்றனர்.இந்நிலையில், மீதமுள்ள இடங்களை நிரப்ப, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நேற்று முதல் ஆன்லைன் பதிவு துவங்கியது. வரும், 25ம் தேதி வரை விண்ணப்பித்து, இலவச சேர்க்கை பெறலாம் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்கள், வட்டார வள மையங்களில், கட்டணமின்றி ஆன்லைனில் மாணவர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்து கொள்ளலாம். இ - சேவை மையங்களிலும், ஆன்லைன் பதிவு மேற்கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக