அடுத்த கல்வி ஆண்டு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட
உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.
8-ம் வகுப்புவரை எந்த மாணவ, மாணவியையும் ‘பெயில்’ ஆக்கவோ அல்லது பள்ளியை விட்டு வெளியேற்றவோ கூடாது என்று கல்வி உரிமை சட்டம்-2009 கூறுகிறது. இதன்படி, 8-ம் வகுப்புவரை, அனைத்து மாணவ, மாணவிகளும் ‘ஆல் பாஸ்’ செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.
திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆல் பாஸ்’ திட்டத்தால், கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பெரும்பாலான மாநிலங்கள் முறையிட்டன. எனவே, கல்வி உரிமை சட்டத்தில் இருந்து, அடுத்த கல்வி ஆண்டு முதல், ‘ஆல் பாஸ்’ திட்டத்தை வாபஸ் பெறுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக