லேபிள்கள்

7.7.17

அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அம்பிகாபதி. இந்த பள்ளியின் கணினி பயிற்றுனராக மணிசேகரன் (45) உள்ளார். 

இவர் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கு மணிசேகரன் கணினி  பாடம் எடுக்கச் சென்றார். அப்போது பேசிக் கொண்டிருந்ததாக கூறி மாணவ, மாணவியரை  மூங்கில் குச்சியால் 40க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.  இவர்களில்  கிருஷ்ணவேணி என்ற மாணவிக்கு கை  எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்று கட்டுப்போட்டு வந்தார்.

மதியம் உணவுக்கு சென்ற மாணவர்கள் புகாரின்படி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து பெரம்பலூர் போலீசார் வந்து விசாரித்தனர். ஆசிரியர் மணிசேகரன் கூறும்போது, மாணவர்களை தேர்வு எழுதுமாறு கூறியதாகவும், அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் அடித்ததாகவும் கூறினார். அதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விசாரணை நடத்தி ஆசிரியர் மணிசேகரனை சஸ்பெண்ட் செய்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக