லேபிள்கள்

6.7.17

'டுபாக்கூர்' கல்லூரிகளில் பி.எட்., சேராதீர்! : : ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை'டுபாக்கூர்' கல்லூரிகளில் பி.எட்., சேராதீர்! : : ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை

'தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் பெறாத, 'டுபாக்கூர்' ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகளில், பி.எட்., பட்டப்படிப்பில் சேர வேண்டாம்' என, கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, ஆசிரியர் படிப்புக்கான, பி.எட்., பட்டப்படிப்பு, கல்வியியல் கல்லுாரிகள் மூலம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், கல்வியியல் கல்லுாரிகளுக்கு, தேசிய கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. 
தமிழகத்தில், கல்வியியல் கல்லுாரிகளுக்கு, தேசிய கல்வி கவுன்சிலின் அங்கீகாரத்துடன், தமிழக கல்வியியல் பல்கலையின் சார்பில், இணைப்பும் வழங்கப்படுகிறது.


ஏற்கனவே, ஒரு ஆண்டு மட்டும் நடத்தப்பட்ட, பி.எட்., படிப்பு, ஒவ்வொரு கல்லுாரியிலும், கடந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, வகுப்பறை, ஆய்வகம், பயிற்சி மையம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், 790 கல்லுாரிகளில் ஆய்வு நடத்தி, படிப்படியாக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அரசின், ஏழு கல்லுாரிகள், அரசு உதவி பெறும், 14 கல்லுாரிகளுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
மற்ற கல்லுாரிகளில், நேரடியாக நிர்வாக ஒதுக்கீட்டில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில், பல கல்லுாரிகள் அடிப்படை உள் கட்டமைப்பை சரிசெய்யாமலும், தகுதியான முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களை நியமிக்காமலும், மாணவர்களை சேர்ப்பதாக புகார்கள் உள்ளன.

இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் தங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய கல்வி கவுன்சிலான, என்.சி.டி.இ., மூலம், அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்லுாரிகளில் மட்டும், பி.எட்., படிப்பில் மாணவர்கள் சேர வேண்டும். சட்டப்படி அனுமதியில்லாத கல்லுாரிகளிலும், படிப்புகளிலும் சேர்ந்தால், அதற்கான இழப்புகளுக்கு பல்கலையோ, தேசிய கல்வி கவுன்சிலோ பொறுப்பல்ல. இதுகுறித்து, http://www.ncte-india.org/ என்ற இணையதளத்தில், கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.'தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் பெறாத, 'டுபாக்கூர்' ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகளில், பி.எட்., பட்டப்படிப்பில் சேர வேண்டாம்' என, கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, ஆசிரியர் படிப்புக்கான, பி.எட்., பட்டப்படிப்பு, கல்வியியல் கல்லுாரிகள் மூலம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், கல்வியியல் கல்லுாரிகளுக்கு, தேசிய கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், கல்வியியல் கல்லுாரிகளுக்கு, தேசிய கல்வி கவுன்சிலின் அங்கீகாரத்துடன், தமிழக கல்வியியல் பல்கலையின் சார்பில், இணைப்பும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, ஒரு ஆண்டு மட்டும் நடத்தப்பட்ட, பி.எட்., படிப்பு, ஒவ்வொரு கல்லுாரியிலும், கடந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, வகுப்பறை, ஆய்வகம், பயிற்சி மையம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், 790 கல்லுாரிகளில் ஆய்வு நடத்தி, படிப்படியாக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அரசின், ஏழு கல்லுாரிகள், அரசு உதவி பெறும், 14 கல்லுாரிகளுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மற்ற கல்லுாரிகளில், நேரடியாக நிர்வாக ஒதுக்கீட்டில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில், பல கல்லுாரிகள் அடிப்படை உள் கட்டமைப்பை சரிசெய்யாமலும், தகுதியான முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களை நியமிக்காமலும், மாணவர்களை சேர்ப்பதாக புகார்கள் உள்ளன. இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் தங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய கல்வி கவுன்சிலான, என்.சி.டி.இ., மூலம், அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்லுாரிகளில் மட்டும், பி.எட்., படிப்பில் மாணவர்கள் சேர வேண்டும். சட்டப்படி அனுமதியில்லாத கல்லுாரிகளிலும், படிப்புகளிலும் சேர்ந்தால், அதற்கான இழப்புகளுக்கு பல்கலையோ, தேசிய கல்வி கவுன்சிலோ பொறுப்பல்ல. இதுகுறித்து, http://www.ncte-india.org/ என்ற இணையதளத்தில், கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக