முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 18 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை; கடும் கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடந்தது.தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 3,375 முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் நேற்று தேர்வு நடந்தது.
எழுதவில்லை : இந்த தேர்வுக்கு, 2.18 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 18 ஆயிரத்து, 182 பேர் தேர்வு எழுதவில்லை. காலை, 10 மணிக்கு துவங்கிய தேர்வு பகல், 1 மணி வரை நடந்தது. தேர்வில் பங்கேற்ற, முதுநிலை பட்டதாரிகள் பலர், தங்கள் குடும்பத்தினர், குழந்தைகளுடன், தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர்; சிலர் கைக்குழந்தைகளுடன் வந்தனர்.
தேர்வு மையத்திற்குள், 'பேனா, ஹால் டிக்கெட்' தவிர, வேறு எந்த பொருட்களும் அனுமதிக்கப்
படவில்லை.
கடினம் ; தேர்வில் முறைகேட்டை தடுக்க, பெண்களின் தலைமுடியை, பெண் போலீசாரும்,
ஆசிரியைகளும் சோதனையிட்டனர்.பல இடங்களில் தண்ணீர் பாட்டில் கொண்டு
செல்லக்கூட, அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வுக்கு, பெரும்பாலும் பெண் பட்டதாரிகளே
அதிகம் வந்திருந்தனர். அவர்களுக்கு துணையாக, கணவர், மாமியார், நாத்தனார் என, குடும்பத்தினர் வந்திருந்தனர். தேர்வில் பங்கேற்றோர், 'வினாத்தாள் கடினமாகவும், சிந்திக்கும் வகையிலும் இருந்தது' என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக