லேபிள்கள்

2.7.17

பான் கார்டு - ஆதார் இணைப்பு புதிய படிவம் வெளியிட்டது வரித்துறை

பான் என்னும் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய, ஒரு பக்க படிவத்தை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.
மக்கள் பீதி
'ஜூலை 1க்குள், நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப்படும்' என, சமூக வலைதளங்களிலும், சில இணையதளங்களிலும் தகவல் வெளியானதையடுத்து, பொதுமக்கள் பீதியடைந்தனர்.


அவர்களின் பீதியை போக்கும் வகையில், 'ஆதார் எண் இணைக்காதவர்களின் பான் எண் முடக்கப்படாது என்றும், தொடர்ந்து இணைக்கலாம்' என, வருமான வரித்துறை அறிவித்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முறையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்கள், நேரடியாக இணைப்புக்கு விண்ணப்பிக்கும் வகையில், ஒரு பக்க படிவத்தை வருமான வரித் துறை நேற்று வெளியிட்டது.


இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முறையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாதவர்கள் மற்றும் இணையதள வசதி இல்லாதவர்களுக்காக, புதிய, ஒரு பக்க படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்பி, அத்துடன், 'என்னிடம் ஒரு பான் எண் மட்டும் உள்ளது. அதனுடன் மட்டுமே என்னுடைய ஆதார் எண்ணை இணைக்கிறேன்' என்ற உறுதிமொழியையும் சமர்ப்பிக்க வேண்டும்.
2.62 கோடி பேர்நாடு முழுவதும், 115 கோடி பேருக்கு ஆதார் எண்ணும், தனி நபர், நிறுவனம் உள்ளிட்ட, 25 கோடி பேருக்கு, பான் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது; இதுவரை 2.62 கோடி பேர், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக