தமிழகத்தில், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையை, 'நீட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண்களுக்கு பதிலாக, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது,
மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும், பதிலளிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள், ஏ.எம்.சாப்ரே மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.தமிழக அரசுஅப்போது, மனுதாரர் சார்பில் கூறப்பட்டதாவது:மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட, 'நீட்' எனப்படும், தேசிய நுழைவுத் தேர்வுக்கு, கடந்த கல்வியாண்டில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது; இந்த ஆண்டும் விலக்கு பெறுவதாக தமிழக அரசு கூறி வந்தது.
இதனால், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என, மாணவர்களும், பெற்றோரும்எண்ணி இருந்தனர்.ஆனால் தற்போது, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும் என, தமிழக அரசுஅறிவித்துள்ளது.இதனால், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை, பிளஸ் 2 தேர்வு அடிப்படையில் நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஒத்திவைப்புஇதையடுத்து, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதனிடையே, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழிற்நுட்ப நிறுவன மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு, ஜே.இ.இ., மற்றும் ஐ.ஐ.டி., இயக்குனருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக