பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், வரும், 22ல், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
இது குறித்து, வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலர்,
தாமஸ் பிராங்கோ மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர், சி.பி.கிருஷ்ணன்
ஆகியோர் கூறியதாவது:வங்கிகளை தனியார் மயமாக்க, லோக்சபாவில், 10ம் தேதி, நிதி தீர்ப்பாய சட்ட மசோதா அறிமுகம் ஆகியுள்ளது. அது நிறைவேறினால், பொதுத்துறை வங்கிகள் காணாமல் போகும்; வாடிக்கையாளர் சேமிப்புக்கு பாதுகாப்பு இருக்காது.
மேலும், நிதி தீர்ப்பாய ஆணையமும் அமைக்கப்படும்; அந்த ஆணையம் நினைத்தால், ஒரு வங்கியை, மற்றொன்றுடன் இணைக்க முடியும் அல்லது இழுத்து மூட முடியும். ஊழியர்களை வெளியே அனுப்பவும் முடியும். எனவே, அந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு, ஊழல் தடுப்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கும் பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும்.
'மூன்று ஆண்டுகளுக்கு புதிய கிளைகள் திறக்கக்கூடாது; நஷ்டத்தில் உள்ள வங்கி கிளைகளை மூடக்கூடாது' என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்ற, வங்கிகள் சீரமைப்பு திட்டத்தில் கையெழுத்திட, வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர் சங்கங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து, 22ம் தேதி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்திய வங்கி அலுவலர் சங்க பொதுச்செயலர், ஆர்.சேகரன் கூறியதாவது:
ஒன்பது சங்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வங்கி சங்கங்கள்
கூட்டமைப்பு சார்பில், போராட்டம் நடக்க உள்ளது. இதில், 10 லட்சம் வங்கி அதிகாரிகள்,
ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அதனால், வங்கி சேவைகள் பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக