ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் வருவாய்த் துறையில் உதவியாளர் முதல் அலுவலர்கள் வரை பங்கேற்பதால் தாலுகா அலுவலகங்கள் இன்று(ஆக., 22) செயல்படாது' என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.
சங்க பொதுச்செயலர் பார்த்திபன், செயலர் முருகையன் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவித்தது.நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல், தலைமை செயலர் போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அறிக்கை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. இன்று நடக்கும் ஒரு நாள் வேலை
நிறுத்தத்தில், மாநிலத்தில்வருவாய் அலுவலர் சங்கத்தினர் உதவியாளர் முதல் தாசில்தார் வரை 12 ஆயிரம் பேர் பங்கேற்பர். இதனால் தாலுகா உட்பட வருவாய் அலுவலகங்கள் செயல்படாது.
செப்., 7ல் நடக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்திலும் வருவாய் அலுவலர்கள் பங்கேற்பர், என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக