லேபிள்கள்

22.8.17

அரசு பள்ளிகளில் பாடம் நடத்த தற்காலிக ஆசிரியருக்கு உத்தரவு

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேரும் பணிக்கு வந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களின், 25க்கும் மேற்பட்ட சங்கத்தினர் அடங்கிய, 'ஜாக்டோ' கூட்டமைப்பும், அரசு ஊழியர்களின், 'ஜியோ' கூட்டமைப்பும் இணைந்து, இன்று, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளன.
இதில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.
எனவே, அரசு பள்ளி களில், குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில், இன்று வகுப்புகள் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, 'அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், இன்று கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். 'வேலை நிறுத்த நாளில் பணியாற்றும், தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும்.'பணி நிரந்தரம் செய்யும் போது, 'போனஸ்' மதிப்பெண் தரப்படும்' என, அதிகாரிகள் கூறிஉள்ளனர்.பல பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்பதால், அங்கு அதிகாரிகளே, பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக