லேபிள்கள்

20.8.17

இடைவெளி ஏற்படுத்தும் தலைமை செயலர் வேளாண் பணியாளர் சங்கம் குற்றச்சாட்டு

'ஆக., 22 வேலை நிறுத்தத்தில் பங்கேற்க கூடாது என தலைமை செயலர் கிரிஜா தெரிவித்திருப்பது அரசுக்கும்,
ஊழியர்களுக்கும் இடைவெளி ஏற்படுத்தும் முயற்சி,'' என, தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மதுரையில் சங்க மாநில தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., அறிவித்தபடி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 1.1.2016 முதல், புதிய சம்பள விகிதம் வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் வழங்க வேண்டும். 
முன்னாள் முதல்வரால் அறிவிக்கப்பட்ட இக்கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜாக்டோ ஜியோ சார்பில் இரு கட்ட போராட்டங்கள் நடந்தன. 
அரசு இதை கண்டுகொள்ளவில்லை. அடுத்தகட்டமாக, ஜாக்டோ ஜியோ சார்பில், ஆக., 22ல் ஒரு நாள் வேலை நிறுத்தம், செப்., 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் 
நடத்தப்படவுள்ளது.இதில் பங்கேற்க கூடாது என, தலைமை செயலர் கூறியிருப்பது அரசுக்கும், ஊழியர்களுக்கும் இடைவெளி ஏற்படுத்தும் முயற்சி. இத்தகைய மிரட்டல் போக்கை கைவிட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இப்போராட்டங்களில், வேளாண் அமைச்சு பணியாளர் சங்கம் பங்கேற்கும்.
சிவகங்கையில், வேளாண் பொறியியல் துறையில், உதவி பொறியாளர் யுவராஜ் தற்கொலை செய்ய காரணமான, உயரதிகாரி மீது நடவடிக்கை கோரி, ஆக., 29ல், விருதுநகர் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 
இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக