தமிழகத்தில் எத்தனை பள்ளிக்கூடங்கள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகின்றன?, அந்த பள்ளிக்கூடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தமிழகத்தில் எத்தனை பள்ளிக்கூடங்கள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகின்றன?, அந்த பள்ளிக்கூடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரசு மறுப்பு
ஈரோட்டில் தனியார் ஆரம்பப் பள்ளி கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக்கூடத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் 2009-ம் ஆண்டு வரை புதுப்பிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு அங்கீகாரத்தை புதுப்பிக்க அரசு மறுத்ததால், அந்த பள்ளி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் பள்ளிக்கூடத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் புதுப்பிக்கப்படவில்லை. தற்போது, அந்த பள்ளிக்கூடத்தில் 130 மாணவர்கள் படிப்பதாக பள்ளி நிர்வாகமும், 122 மாணவர்கள் படிப்பதாக மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியும் கூறுகின்றனர்.
அதிகாரிகள் அஜாக்கிரதை
இந்த பள்ளிக்கூடம் 2009-ம் ஆண்டு முதல் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் அஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளனர். அங்கீகாரம் புதுப்பிக்காத இந்த பள்ளிக்கூடத்தை இழுத்து மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்கூடத்துக்கு அங்கீகாரம் இல்லை என்றால், அந்த பள்ளிக்கூடத்தை இழுத்து மூடி, அதில் படிக்கின்ற குழந்தைகளை அருகேயுள்ள அங்கீகாரம் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது கல்வித்துறை அதிகாரிகளின் கடமை. அதை அதிகாரிகள் செய்யவில்லை.
அங்கீகாரத்தை புதுப்பிக்காத இந்த பள்ளியில், கடந்த 7 ஆண்டுகளாக படித்த மாணவர்கள், மேல்படிப்புக்காக வேறு பள்ளியில் சேர்ந்துள்ளனர். அவர்களின் விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.
அங்கீகாரம் இல்லை
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, அனைத்து பள்ளிக்கூடங்களும் அங்கீகாரம் பெற்றுள்ளதா?, அந்த அங்கீகாரம் முறையாக புதுப்பிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது கல்வித்துறை அதிகாரிகளின் கடமையாகும். அதை அதிகாரிகள் செய்யவில்லை. அதனால், தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளிக்கூடங்கள் முறையான அங்கீகாரங்கள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. அதனால், கீழ்கண்ட கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்கவேண்டும்.
தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிக்கூடங்கள் உள்ளன?, அங்கீகாரம் இல்லாமல் அல்லது அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் எத்தனை பள்ளிக் கூடங்கள் செயல்படுகின்றன?, அந்த பள்ளிக்கூடங்களில் எத்தனை மாணவர்கள் படித்து வருகின்றனர்?.
என்ன நடவடிக்கை?
அங்கீகாரம் பெற்ற பின்னரே மாணவர்கள் சேர்க்கையை பள்ளிக்கூடங்கள் மேற்கொள்கிறது என்பதை அதிகாரிகள் முறையாக கண்காணிக்கின்றனரா?, ஆண்டுக்கு எத்தனை முறை தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சென்று கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்?, விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிக்கூடங்களுக்கு எதிராக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன?.
மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் சேர்க்கையை மேற்கொள்ள தடைவிதிக்கப்படுகிறதா?, அப்படிப்பட்ட பள்ளிக்கூடங் களை ‘சீல்’ வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனரா?.
புதிய சட்டம்
அந்த பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் ஏதாவது விதிக்கப்பட்டுள்ளதா?, அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கூடங்களை நடத்தும் நபர்களை கைது செய்து, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும் விதமாக புதிய சட்டத்தை ஏன் அரசு உருவாக்கக்கூடாது?, அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கூடங்களில் படித்து இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர்கள் எத்தனை பேர்?.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக