அரசியல்வாதிகளின் தலையீடுகளால், இரண்டு வாரங்களாக பள்ளிக்கல்வி பணிகள் முடங்கியுள்ளன. அமைச்சர் செங்கோட்டையனின் நேரடி ஆய்வை
தொடர்ந்து, முட்டுக்கட்டை ஆசாமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதனால், மீண்டும் பள்ளிக்கல்வி பணிகள் புத்துயிர் பெற்றுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில், அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரன் பொறுப்பேற்ற பின், ஐந்து மாதங்களாக புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. புதிய பாடத்திட்டம் உருவாக்குவது, புதிய இணையதளங்கள் ஏற்படுத்துவது, பிளஸ் 1க்கு பொது தேர்வு விதிகள் உருவாக்குதல், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குதல், போட்டி தேர்வுகள் நடத்துதல் என, பல பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக, 50க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் இயங்கி வருகின்றன. பள்ளிக்கல்வியில் ஏற்படும் திடீர் மாற்றங்களால், ஒரு தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். அவர்கள், சில தனியார் பள்ளி அதிபர்கள் மற்றும் சில ஆசிரியர் சங்க நிர்வாகிகளை துாண்டி விட்டு, பள்ளிக்கல்வி பணிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தினர். அதனால்,
பள்ளிக்கல்வி பணிகளில், திடீர் தொய்வு ஏற்பட்டது. இரண்டு வாரங்களாக, கோப்புகள் சரிபார்க்கப்படாமல் தேக்கம் அடைந்தன. சில சங்க நிர்வாகிகள், அமைச்சருக்கு எதிராக, சில
அரசியல் கட்சி அலுவலகங்களுக்கும் கடிதங்கள் அனுப்பினர். இதையடுத்து, பள்ளிக்கல்வியில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களையும், பள்ளிக்கல்வியின் முன்னேற்ற திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் ஆசாமிகள் குறித்தும், அமைச்சர் செங்கோட்டையன் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து, மீண்டும் பள்ளிக்கல்வி பணிகள் புத்துயிர் பெற்றுள்ளன. நேற்று பாடத்திட்டம் தொடர்பாக, மதுரையில் கருத்து கேட்பு, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. நாளை கோவையிலும், 22ம் தேதி சென்னையிலும், 25ல் தஞ்சாவூரில் கருத்து அறியும் கூட்டம் நடக்கிறது.
பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பித்தல், வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவது, மாதிரி வினா விடை தயாரித்தல், மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருதல், என அனைத்து பணிகளும் மீண்டும் துவங்கியுள்ளன. புதிய திட்டங்களை, டிசம்பருக்குள் முடித்து, ஜன.,யில் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக