தமிழக புதிய பாடத் திட்டத்தில், அமெரிக்க, ஜெர்மன் தொழில்நுட்ப கல்வியை சேர்க்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 14 ஆண்டு களாக மாற்றப்படாத,
பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் உட்பட, அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டத்தையும் மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், உயர்மட்ட மற்றும் கலைத்திட்ட குழுக்கள் அமைத்து, பாடத்திட்டத்தை புதுமைப்படுத்தும் பணி துவங்கிஉள்ளது.இதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளியை ஒருங்கிணைப்பாளராக நியமித்து, பாடத்திட்ட பணிகள் நடந்து வருகின்றன.மாநிலம் முழுவதும், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்பு கூட்டம், ஆலோசனை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்களை பெற, பள்ளிகளில் கருத்தறியும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.பாடத்திட்ட மாற்றத்திற்காக, புதிய இணையதளமும் விரைவில் துவங்கப்பட உள்ளது.இந்நிலையில், புதிய பாடத்திட்டம் குறித்து, சர்வதேச, தேசிய அளவிலான பல்வேறு பாடத்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள முக்கிய அம்சங்கள் தொகுக்கப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.இதில், அமெரிக்கா, ஜெர்மன் நாடுகளின், தொழில்நுட்ப கல்வியை இடம்பெற வைக்கலாம் என, கல்விக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.கணினி அறிவியல், தகவல் தொடர்பு, அடிப்படை மின்னணு தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் போன்ற அம்சங்கள், வெளிநாடுகளின் பள்ளி பாடத் திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.இந்த பாடங்கள், தமிழக பாடத்திட்டத்திலும் இடம் பெற உள்ளன. இதன் மூலம், தமிழக புதிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், பிளஸ் 2 முடிக்கும் முன், இன்ஜி., அடிப்படை பாடத்தை தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக