தமிழகத்தில், 14 ஆண்டுகளாக மாற்றப்படாத, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மற்றும் ஆறு ஆண்டுகளாக மாற்றப்படாத,
ஒன்று முதல், 10ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம், விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் ஆகியோர், நேரடி மேற்பார்வையில், நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுக்கள், பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்களை தொகுத்து வருகின்றனர். மேலும், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், கலைத்திட்டத்தை, தயாரித்து வருகின்றனர். பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களின் ஆலோசனைகளை பெற, பள்ளிகளில் கருத்தறியும் பெட்டி வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின், புதிய இணையதளம், இன்னும் ஒரு வாரத்தில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. அதில், புதிய பாடத்திட்டம் தொடர்பாக, ஆன்லைனில் ஆலோசனைகள் பெறப்பட உள்ளன.இந்த இணையதளத்தை, வெளிநாடு வாழ்
தமிழர்கள் மற்றும் வெளிநாட்டு கல்வியாளர்கள், தொழிற்துறை நிபுணர்களும் பயன்படுத்தும் வகையில், ஆங்கிலத்திலும் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவர்கள், தாங்கள் வசிக்கும் நாட்டின் பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகம் குறித்தும், தமிழகத்தில் சர்வதேச அளவில், எந்த வகையில், பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றும், இணையதளத்தில் ஆலோசனை தெரிவிக்கலாம். கல்லுாரி மாணவர்களும், தங்கள் ஆலோசனைகளை, இணையதளத்தில் தெரிவிக்க வசதி செய்யப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக