லேபிள்கள்

18.8.17

CPS : பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் முதல்வருடன் திடீர் சந்திப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார். 
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்க ஆணையிட்டார்.

இந்நிலையில், மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து வல்லுனர் குழு அறிக்கை தயாரிக்க இருந்த நிலையில் சாந்தா ஷீலா நாயர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், வல்லுனர் குழு தனது பணியினை தொடர்ந்து விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க ஏதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரை கடந்த 3ம் தேதி வல்லுனர் குழுவின் தலைவராக தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், வல்லுனர் குழுவின் தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக