லேபிள்கள்

14.8.17

ஸ்டிரைக்கில் குதிக்கிறது அரசுப் பணியாளர் சங்கம்

 ஜாக்டோ-- ஜியோ அமைப்பினரை தொடர்ந்து, அரசுப் பணியாளர் சங்கமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துஉள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர்
சங்கத்தின் போராட்ட முன் தயாரிப்பு பயிற்சி முகாம், திண்டுக்கல் மாவட்டம் 
வத்தலக்குண்டில் நடந்தது. இதில் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் பேசியதாவது:
பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வது, தற்போது நியமிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆக., 4ல் உண்ணாவிரதம் இருந்தோம். அரசு கண்டுகொள்ளாததால் ஆக., 22ல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டமும் நடக்கிறது.
செப்., 7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போகிறோம். அதற்கு முன்பாக செப்., 4 முதல் 6 வரை சென்னை தலைமை செயலகம் நோக்கி கண்டன ஊர்வலம் நடக்கிறது.
அரசு பேச்சு நடத்தும் என நம்புகிறோம். இல்லாவிட்டால் எங்களது போராட்டம் கடுமையாக இருக்கும்.இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக