11ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். அனைத்து பள்ளிகளிலும் மாதிரி வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறந்த கல்வியாளராக மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத மாணவர்களும், பிளஸ் 2 வில் சேர்ந்த பின்னர் தேர்வெழுத முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கல்வித்துறைக்காக பல்வேறு மாற்றங்களை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார். மேலும், கட்டமைப்பு, கல்வி தரத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொது தேர்வை கண்டு மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், பிளஸ் 1 காலாண்டு தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதால் மாதிரி வினாத்தாள் வௌியிடப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக