அரசு கலைக்கல்லுாரிகளில் காலியாக உள்ள 1,730 உதவி பேராசிரியர்
பணியிடங்களை நிரப்பாததால் மாணவர்களின் கற்றலில் பின்னடைவு
ஏற்பட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். 'தமிழகத்தில் 82 அரசு
கலைக்கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்
பணியிடங்கள் நிரப்படும்' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,
சட்டசபையில் 110 விதியின் கீழ் 2015ல் அறிவித்தார். ஆனால் மூன்று
ஆண்டுகளாக கல்லுாரிகளில் ஒரு பணியிடம் கூட நிரப்பப்பட வில்லை.
காத்திருப்போர் கதி : அரசு கல்லுாரிகளில் 2008 ல் 487 பேர், 2009 ல் 1,114 பேர்,
காத்திருப்போர் கதி : அரசு கல்லுாரிகளில் 2008 ல் 487 பேர், 2009 ல் 1,114 பேர்,
2011 ல் 759 பேர், 2015ல் 1,015 பேர் என, ஆசிரியர் பணியிடங்கள்
நிரப்பப்பட்டன. அதற்கு பின் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு
நடத்தவில்லை. காலிப்பணியிடங்களை நிரப்ப உயர்கல்வித்துறை
எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால், அரசு மற்றும் உதவி
பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்று ஆண்டுகளாக
1,730 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அதிக
பட்சமாக ஆங்கில துறையில் 349, தமிழ்- 244, கணிதம்- 212, வேதியியல் -
197, இயற்பியல் -151, வணிகவியல் - 138, பொருளியல் - 117, தாவரவியல் -
105, வரலாறு- 103 என மொத்தம் 61 துறைகளில் பணியிடங்கள்
நிரப்பப்படாமல் உள்ளன.
அரசுக்கல்லுாரிகளில் காலிப்பணியிடங்களை சமாளிக்க கவுரவ
அரசுக்கல்லுாரிகளில் காலிப்பணியிடங்களை சமாளிக்க கவுரவ
விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். பல கல்லுாரிகளில் உரிய
தகுதி இல்லாதவர்களையும் நியமித்துக் கொள்வதாகவும் புகார்
எழுந்துள்ளது.'உதவி பேராசிரியர் பணிக்காக ஏராளமானோர்
காத்திருக்கும் நிலையில், தகுதி தேர்வை உடனே நடத்த வேண்டும்' என
கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக